நெடுஞ்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு நவம்பர் 21ம் முதல் ஃபாஸ்ட்டேக்குகளை விநியோகிக்கும் பணி தொடங்கியுள்ளது. இது டிசம்பர் 1ம் தேதி வரை இலவசமாக வழங்கப்படும். ஆனால் டிசம்பர் 2ம் தேதிக்கு பிறகு நிலைமை எவ்வாறு மாறும் என்பதை சொல்ல முடியாது என்று தெரிவித்தார்.
ஃபாஸ்ட்டேகுகள் மட்டுமே இலவசமாக வழங்கப்படும். அதற்குரிய கணக்குகளில் கட்டணத்திற்கான பணத்தை டாப் அப் செய்ய, வாடிக்கையாளர்கள் அவர்களுடைய சொந்த பணத்தை தான் செலவழிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம், நாடு முழுவதும் உள்ள பல்வேறு சுங்கச்சாவடிகளில் பாயிண்ட் ஆஃப் சேல் எனப்படும் பிஓஎஸ்-ஐ (Point of Sale) POS-யை நிறுவியுள்ளது. இங்கு வாகன ஓட்டிகள் ஃபாஸ்ட்டேக்கை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.
மத்திய நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின்