புதுக்கோட்டை: உள்ளாட்சித் தேர்தலில் இந்துக்கள் அதிகமாக உள்ள கிராமம் ஒன்றில் இருந்து இஸ்லாமியர் ஒருவர் பஞ்யாத்து தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

நாடு முழுவதும் மத அடிப்படையிலான பிரிவிணைவாதம், வகுப்புவதம் தொடர்பான அச்சம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மத நல்லிணக்கத்துக்கு தமிழகம் பெயர் போனது என்பதற்கு எடுத்துக்காட்டாக மற்றொரு சம்பவம் உள்ளாட்சித் தேர்தலின் போது நடைபெற்றுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே செரியலூர்இனாம் என்ற கிராமம் இந்து சமூகத்தை பெரும்பான்மையாக கொண்ட ஊர் ஆகும். இங்கு இஸ்லாமியர்கள் வாக்குகள் 60 என்ற அளவிலே உள்ளன.