சென்னை எழும்பூரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இரண்டு சீனர்கள் தங்கியிருந்தனர். அவர்களுக்கு தொடர்ந்து காய்ச்சல் இருந்துவந்ததால் கொரோனா வைரஸ் தாக்கப்பட்டிருக்குமோ என்ற அச்சம் உருவாகியது.

இதனால் ஹோட்டல் நிர்வாகம் இரு சீனர்களையும் நேற்று இரவு 10 மணிக்கு மேல் ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர்களை மருத்துவர்கள் தனிமைப்படுத்தி தனிவார்டில் வைத்து தீவிர சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர்.